ஆறுதல்

நன்றி நவிலல்

நாகராஜா உதயகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராஜா உதயகுமார்

வயது 4315 டிசம்பர், 1975 – 27 மே, 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
Endingen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த மானிப்பாய் வடக்கில் 15/DEC/1975 ஆம் ஆண்டில் நாகராஜா விமலா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக உதயகுமார் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கவிதா, ஜீவிதா, நிறைஞ்சகுமார் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் முத்துராசா சதாசிவதேவி தம்பதிகளின் அன்பு மகள் மைதிலி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து கீர்த்தனன், சாருஜன், டில்வினா போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,உற்றார் உறவினர் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 27.05.2019 இல் 43 வயதில் ஜேர்மனியில் உள்ள Endingen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மானிப்பாய் மண்ணின்
........ மங்காத சுடரே
மனித மனங்களை
.......ஆண்ட உறவே
கருணை மனமே
........கலங்கரைத் தீபமே
காலத்தில் மறையாது
......கடவுளாய் நிலைத்தீர்

பிற அறிவித்தல்கள்

  1. 28 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.