மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா உதயகுமார்
வயது 4315 டிசம்பர், 1975 – 27 மே, 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Endingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா உதயகுமார் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகராஜா விமலா(பண்டாரிக்குளம் வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மைதிலி(வவா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனன்(சைலு), சாருஜன், டில்வினா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கவிதா, ஜீவிதா(ஜேர்மனி), நிறைஞ்சகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), மாலினி(ஜேர்மனி), ரஜனி(அமுதா- சுவிஸ்), சுபபாணி(சுபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜகாந்தன்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜெயா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவசக்தி(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
மயூரன், கீரன்(ஜேர்மனி), கீர்த்தன், குமரன்(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
லக்ஷன், பாருஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கிருஷான், மதுஷான், மீனுஜா(லண்டன்), டாருஜா, டகிரன், சகிரா(ஜேர்மனி), வினுஸ்கா, ரக்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த மானிப்பாய் வடக்கில் 15/DEC/1975 ஆம் ஆண்டில் நாகராஜா விமலா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக உதயகுமார் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கவிதா, ஜீவிதா, நிறைஞ்சகுமார் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் முத்துராசா சதாசிவதேவி தம்பதிகளின் அன்பு மகள் மைதிலி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து கீர்த்தனன், சாருஜன், டில்வினா போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,உற்றார் உறவினர் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 27.05.2019 இல் 43 வயதில் ஜேர்மனியில் உள்ள Endingen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
மானிப்பாய் மண்ணின்
........ மங்காத சுடரே
மனித மனங்களை
.......ஆண்ட உறவே
கருணை மனமே
........கலங்கரைத் தீபமே
காலத்தில் மறையாது
......கடவுளாய் நிலைத்தீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

