நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா சரஸ்வதி
வயது 7826 ஆகஸ்ட், 1940 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது அன்புத்தெய்வம் எம்மைவிட்டு மறைந்த செய்தியினை கேள்வியுற்று உடனே எமது இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், இறுதி அஞ்சலியில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழ்வதுடன், பல்கலைக்கழகம் அமைத்துள்ள படித்த மக்கள் நிறைந்து வாழும் இடமுமான திருநெல்வேலி தெற்கில் 26/Aug/1940 இல் தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அருமைப் மகளாய் சரஸ்வதி அவர்கள் சங்கரலிங்கம், சிவபாக்கியம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நயினாதீவு கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான நாகராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தில்லைநாயகி, ஜெயபுஷ்பராணி, பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன், கஜீந்திரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ரதிகாந்தன், தியாகராசா, ரதிமாலா, ஜெயந்தி, சத்தியவதனி, ஜெயரூபி, கவிதா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.07.2019 இல் 78 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கருணை முகமே
அருமை மனமே
சிறுமைக் குணமற்ற
சிந்தை உள்ளமே
கடவுள் உருவின்
கடைசி உயிரே
படமானீர் மனதில்
பசுமை நினைவுடன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

