மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா சிவானந்தசோதி
லண்டன் தமிழர் தகவல் சஞ்சிகை ஆசிரியர், ஓய்வுபெற்ற இலங்கை அரசு உத்தியோகத்தர்
வயது 7717 ஜனவரி, 1942 – 29 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், இந்தியா, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சிவானந்தசோதி அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா, அமிர்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை, இராசமணி(கொழும்பு) தம்பதிகளின் இளைய மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாநந்தினி, பிருந்தா, காயத்ரி, ராதிகா, ஜெயபாரதி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. சுந்தரேசன், பிரபுகுமார், முரளிராஜ், பார்த்தன்(Montreal) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரன், மிதுன், மயிலன், வேலா, சேனா, சம்யுக்தா, அமிர்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நீக்கிலஸ்(கரம்பன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சனிதேவி- காலஞ்சென்ற ராஜசூரியர், ரவி- நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், கார்தீபன், பிரசன்னா, சஹானா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
டெவ்னி, டிலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மங்களேஸ்வரன்(ராசன்), காலஞ்சென்ற நளாயினி, மனோரஞ்சன்- உதயா, மகேந்திரன்(ரவி- சுவிஸ்)- வாசுகி, வத்சலா- காலஞ்சென்ற ஜெயகுமார், கிருபாநிதி- மாலினி(கனடா), ஜெயநிதி(ஜெயா)- ரேச்சல் ஆகியோரின் அன்பு தாய் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதுடன் யாழ்பாணத்திற்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை கரம்பனில் 17/JAN/1942 ஆம் ஆண்டில் திரு.திருமதி நாகராசா அமிர்தாம்பாள் தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக திரு.சிவானந்தசோதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ராஜேஸ்வரி எனும் சகோதரியுடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கனகசபாபதிப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளான பத்மினி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சிவாநந்தினி, பிருந்தா, காயத்ரி, ராதிகா, ஜெயபாரதி, செந்தூரன் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து நல் கல்வியை புகட்டி பெரியவர்களானதும் திருமணம் முடித்து வைத்து மதுரன், மிதுன், மயிலன், வேலா, சேனா, சம்யுக்தா, அமிர்தா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் சோதி என அனைவராலும் அழைக்கப்படும் இவர் இலங்கையில் அரச உத்தியோகத்தராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன், லண்டன் தமிழர் தகவல் சஞ்சிகை ஆசிரியராகவும் சேவையாற்றியதுடன், அதிக அன்பு கொண்டவரும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.10.2019 இல் 77 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

