ஆறுதல்

நன்றி நவிலல்

நாகரத்தினம் நாகேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகரத்தினம் நாகேந்திரம்

வயது 746 ஜூலை, 1945 – 10 அக்டோபர், 2019

பிறந்த இடம்
கைதடி மேற்கு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள்எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!

என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட நாகரத்தினம் நாகேந்திரம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட கைதடி மேற்கில் 06/JUL/1945 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலாயுதர் தங்கம்மா தம்பதிகளின் அழகுக் குழந்தையாக நாகரத்தினம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பொன்னுத்துரை, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், தனேஸ்வரி போன்ற சகோதரங்களுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும், திரு.திருமதி கோவிந்தர் ராசமுத்து தம்பதிகளின் அன்பு மகன் நாகேந்திரம் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக உதயமதி, தர்சினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து தபனியா, ஹமிஷா, பிரதீஷா, கிருஸ்ணா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.10.2019 இல் 74 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 14 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.