1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நளினி ரவீந்திரகுமார்
வயது 5821 மே, 1957 – 21 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Herning
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதுவோ என் துணைவியவள் பிரிந்து
கண்களில் ஆறாக நீரது வழிந்தோட
அழைக்கின்றேன் நான் உங்களை - இன்று
சேர்ந்து வாழ்ந்திட வருவாயோ
காத்திருக்கிறேன் நான் இங்கு!
மாறாத உங்கள் நினைவுடன் கணமேனும்
மறவாத உங்கள் முகம் தன்னை தேடுகின்றேன்
எங்களை தவியாய் தவிக்கவிட்டு
பதில் ஏதும் சொல்லாமல்
சென்று விட்டீர்களே என் பவா குட்டி!
பிறவிப் பயனிலே என் தவத்தில் எனக்கு
தாரமாய், தாயாய் உங்கள் கஷ்டங்களை
விடுத்து என்னை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த என் தாயே!
உங்களைத் தாரமாக நான் பெற வரம் வாங்கி
வந்தேன் என் வாழ்வினிலே!
உங்கள் உடல் நிலைபாராது
அன்னம் அளித்து ஆறுதலாக பேசிய உங்கள்
உன்னதமான உயர்ந்த அன்பின்
ஊற்றினைப் பிரிந்து என் கண்களில்
வடியுது கண்ணீர் ஆறாக
தன்னந்தனியே என்னைத் தவிக்கவிட்டு
சென்று விட்டீர்களேயடா என் பவாவே!!
உங்கள் சிரிப்பையும், நகைச்சுவையான பேச்சையும்
கேட்காது சிதையுது என் நெஞ்சம்!
என்னை வாரியணைத்த உங்கள் உயர்ந்த பாசமே
எனக்கு இப்ப பஞ்சம்
எத்தனையோ தடவை காலவனை எனக்காக
வென்று வந்த உங்களுக்கு காலவன்
இந்தமுறை காட்டவில்லை கருணை கொஞ்சம்
என் பவாக்குட்டியின் நினைவலைகளும்
கண்ணீரும் தானே இனி எனக்கு தஞ்சம்!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும் என் நினைவுகளில் ஆண்டுகள்
கடந்தாலும் என் நெஞ்சில்
அழியாத சித்திரமாய் என் ஆன்மா உங்கள்
திருவடி சேரும் வரை வையத்து வாழ்வினை தந்து
வாழ்வாய் தாயே!!
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
உங்கள் கணவர், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்
To my beautiful mom:
One year has passed since you left us
but it only feels like yesterday.
The pain of loosing you is still hard
and time is not making it any easier.
If only i could talk to you
and hold your hand one more time.
I look at your beautiful face every day
and wish i could have had more time
with you to say all the things
I missed when you were alive.
I know life was not easy for you
and you spent every day in pain.
Atleast i hope you are now at peace
and is no longer suffering.
I can feel that You are looking after us
and protecting us.
I know you will watch over your grandchildren
as if you were here.
I would give anything to give you one hug
and tell you how much i Love You.
Mom! you will always be in my heart
and those special memories will always
bring a smile to my face.
Rest in Peace my dearest Mom!
I Love You..
Your beloved daughter
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

