ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை

வயது 8724 பிப்ரவரி, 1932 – 22 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
கொழும்பு, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(Railway Head Guard- Srilanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகுமார், சாந்தினி, நந்தகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மஞ்சுளா, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. கீத்தன், கவிதா- சுதர்ஷன், Dr. அமிர்தா- ஜெரற், Dr. சிந்தா, ரான்யா, கிருஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அவானியா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்/வட்டுக்கோட்டை கிழக்கு சித்தன்கேணியில் 24-02-1932 இல் விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக பரமேஸ்வரி அழகிய குழந்தையாக அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அழகு மகனான இலங்கையில் Railway head guard ஆக வேலை பார்த்த கணபதிப்பிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்த சிவகுமார், சாந்தினி, நந்தகுமார் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்து மஞ்சுளா, ஸ்ரீகாந்தன், ஆனந்தி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை என தூக்கி அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

செல்வமணி அம்மா என அனைவராலும் அழைக்கப்படும் இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.04.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

""குல விளக்கே
.....கோவில் சிலையே
குங்கும நிறமே
......குல தெய்வமே
அறிவின் ஊற்றே
....அன்பு மனமே
அழகு தாமரையே
....வாடி வீழ்ந்தது ஏன்.""

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.