ஆறுதல்

நினைவஞ்சலி

பொன்னையா படைவீரசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா படைவீரசிங்கம்

வயது 875 டிசம்பர், 1931 – 19 அக்டோபர், 2019

பிறந்த இடம்
மட்டுவில் தெற்கு
வாழ்ந்த இடம்
மந்துவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மந்துவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா படைவீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அணைந்ததோ ஒளி விளக்கு!
அறுந்ததோ பாசப்பிணைப்பு!
என்ன சொல்லி தேறிடுவோம்
உறவே உன் பிரிவுதனை
உன் புன்னகை வதனம்தனை இனி
எப் பிறப்பில் காண்போம் நாம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

மறைவால் துயருறும்
கோபாலகிருஷ்ணன் சுகந்தினி குடும்பம், ஜேர்மனி

அணைந்ததோ ஒளிவிளக்கு? அறுந்ததோ பாசப்பிணைப்பு?
என்ன சொல்லி தேறிடுவோம் உன் பிரிவுதனை
உன்புன்னகை வதனம்தனை இனி எப்பிறப்பில் காண்போம் நாம்!
பொல்லாத காலனவன் எமைப்பிரித்து
உனையெடுத்து பாதகம் புரிந்து விட்டான்!
என்ன சொல்லித்தேறிடுவோம்?
யாரிடத்தில் போய் அழுவோம்?
மனம்தான் ஆறிடுமோ!
உன்னை மறந்து வாழ்ந்திடுமோ!
பொல்லாத துயரமதில் மூழ்கிக்கிடக்கின்றோம்!

மறைவால் துயருறும்
ஆ.இரத்தினராசா குடும்பம், நுணாவில்

அண்ணா கடவுளை நீங்கள் கும்பிட்டு வீட்டில் சுவாமிப் படத்துக்குபூப்போட்டு கும்பிட்டு உங்கள் அமைதியான உள்ளத்துக்கு திக்கற்றவர்க்கு தெய்மே துணையென்று நீங்கள் கடவுளிடம் சென்றுவீட்டீர்கள் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் இருந்தாலு அருமைத் தங்கச்சி சந்திராவும் இரத்தினராஜாவும் உங்களுக்குப் பிள்ளைகளாகவும் சகோதரராகவும் உங்களைப் பார்த்தனர். தங்கச்சி சந்திரா உங்கள் பிரிவால் ஆறாத்துயரில் உள்ளார். அண்ணா நீங்கள் என்னில் அளவு கடந்த பாசம் நானும் உங்களில் அளவு கடந்த பாசம் நான் உங்களிடம் கொடுக்கச் சொல்லி வலம்புரிச் சங்கும், துளசி மாலையும் தங்கை குணமிடம் கொடுத்து அனுப்பியுள்ளேன்

“திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனிதனைச்
சிவனெனவே கண்டலர்க்கும் சிவனுறைவே நாங்கே”

அண்ணா அண்ணா என்று கூப்பிட்டு என்னுடைய கண்ணீர் இன்றும் ஆறவே இல்லை.

ஆனந்தமணி, நாகேஸ்வரி(சின்னமணி)

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாங்கள் துயருற்று இருந்தவேளை நேரில் வருகை தந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் துக்கம் பகிர்ந்தவர்க்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றவர்களுக்கும், அனுதாபக் கவிதைகள் அனுப்பியவர்களுக்கும், அனுதாபங்களை தெரிவித்தவர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். அதனைத் தொடர்ந்து 16-11-2019 சனிக்கிழமை அன்று கீரிமலை நகுலேஸ்வர ஆலய மடத்தில் நடைபெற இருக்கும் அந்தியேட்டி கிரியை மற்றும் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை ஜெகா(கனடா) அவரின் இல்லத்தில், 18-11-2019 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்திலும் நடைபெறும்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கையில் அனைவரிடமும் அன்பாக பழகுபவரான பொன்னையா படைவீரசிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் தெற்கில் 05/DEC/1931இல் பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனாக படைவீரசிங்கம் அவர்கள் பிறந்தார். மகேஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, பாலசிங்கம், ஜெகதீஸ்வரி எனும் சகோதரங்களோடு குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்.

முழுக் கதையையும் வாசிக்க

மின்சார வாரியத்தில் அலுவலராக பண்புரிந்து வந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும், 1973 ஆம் ஆண்டு பார்வதிப்பிள்ளை அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்.மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் வயது மூப்பின் காரணமாக 19.10.2019 இல் 87 வயதில் மந்துவிலில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.