31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை துரைச்செல்வம்
ஓம் முருகா கடை
வயது 6716 ஜூலை, 1948 – 15 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- நோர்வே, Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை துரைச்செல்வம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் உயிரில் கலந்த அப்பாவே!
எம்மைவிட்டுப் பிரிந்து முப்பத்தொரு நாட்கள்
ஓடி மறைந்து விட்டதப்பா!
நித்தம் நித்திம் எங்கள் கண்முன்
நிறைந்திருக்கும் எங்கள் அன்பு அப்பாவே
நினைவிருக்கும் வரை உங்களைக்
காத்தல்லோ நிற்கின்றோம்
வாழ்ந்த தேசம் விட்டு வந்து
எம்மை வாழ வைத்த தெய்வமே
ஒரு வார்த்தை கூடப் பேசாது
வானுறைந்து விட்டீர்களே!!
நினைவுகளையெல்லாம் நினைக்கும் போது
அங்கே உங்கள் முகம் தானே அப்பா
பட்டொளியாய் தெரிகிறது
மீண்டும் மீண்டும் ஒரு முறை எமக்காய்
வந்துதிப்பாய் எம் அப்பாவே!
கன கன கதைகள் பேச
கனக்க இருக்கிறதப்பா
யார் வந்து என்ன வரம் வேண்டும்
என்று கேட்டால்
எங்கள் அப்பாவை மீண்டும்
திருப்பத் தா என்போம்
அப்பா மீண்டும் ஒரு முறை
எங்களிடம் வா அப்பா!
எங்கள் குடும்ப விளக்கு மரணம் அடைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு ஆறுதல் கூறியும், உதவி ஒத்தாசை புரிந்தவர்களுக்கும், துயரத்தைப் பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி முலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், மலர் வளையங்கள், பூச்செண்டு சாத்திய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, 16-04-2016 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Stovner Kirke, Stovnerfaret 25 எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

