நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பகலாதேவி கமலநாதன்
வயது 5911 செப்டம்பர், 1960 – 11 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Solingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர், ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
தனது அன்பான பேச்சாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
யாழ்ப்பாணம் அரியாலையில் யோகராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளாக புஸ்பகலாதேவி அவர்கள் பிறந்தார். சற்குணவதி, குமாரதாஸ், வைகுந்தவாசன், மனோராணி, புனிதராணி, மகேந்திரன் எனும் உடன்பிறப்புகளுடன் ஓடி ஆடி குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார் இவர் பள்ளிப்படிப்பை மட்டும் பயின்றார்.
முழுக் கதையையும் வாசிக்க
திருமண வயதை எட்டியதும் தனது பெற்றோர் நிச்சயத்தபடி சுப்ரமணியம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனான கமலநாதன் என்பவரைத் திருமணம் முடித்தார். இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக,லிங்காதரன், தர்சினி, ரஜனி ஆகிய பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணிபோல பாதுகாத்து வளர்த்து பெரியவர்களாக்கி, தனது பிள்ளைகளுக்குத்முரளிபிரசாத், ரதிகுமார் ஆகியோர்களைத் திருமணம் முடித்து வைத்து,கவிஷா, யுவண்ராம், ரக்ஷாந்த், ரபிஷா, யஷ்விண்ராம், பூமிகா, சாய்ராம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, சுவையான உணவுகள் செய்வதில் கைதேந்தவராக விளங்கினார். இவ்வாறு கணவர், பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணாமாக 11.10.2019 இல் 59 வயதில் ஜேர்மனியில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

