மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி இராசையா
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி- பழைய மாணவி, Teacher , முன்னாள் Teacher - மத்திய கல்லூரி, Jaffna Holy Family Convent
வயது 8431 மார்ச், 1935 – 15 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராசையா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோதிரெட்ணம் இராசையா(Bose- Retired Police officer) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(கனடா), மகேந்திரராஜா(டுபாய்), விவேகானந்தராஜா(கனடா), பொப்பிசை பிதா நித்தி கனகரெட்ணம்(அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி(Baba- கனடா), காலஞ்சென்ற சிவானந்தராஜா(Barlow), சாரதா(பிரித்தானியா), சாந்தா(கனடா), தவேந்திரராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசலஷ்மி(Teacher), ரவீந்திரராணி, காலஞ்சென்ற அகிலா, செல்வராணி, சந்திரா, மகேந்திரன், பேஷி பயஸ், தவநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிறஞ்சன், பாமினி, குமுதினி, பிரமலன், ஜெனந்தி, காலஞ்சென்ற குகப்பிரியன், பிரனவன், லாவன்யா, நிவேதித், அம்பிரித்தா, ஆராதனா, லவ்ஷா, தர்சன், கனெக்ஸ், விந்தியா, தனுசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷோண், சுகன்யா, சிவகரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 31/MAR/1935 இல் திரு.திருமதி கனகரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமை மகளாய் புவனேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பாலசுப்பிரமணியம், மகேந்திரராஜா ,விவேகானந்தராஜா, பொப்பிசை பிதா நித்தி கனகரெட்ணம், இராஜேஸ்வரி, சிவானந்தராஜா, சாரதா, சாந்தா, தவேந்திரராஜா எனும் உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி இராசையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகன் Bose Retired Police Officer ஆன திரு.ஜோதிரெட்ணம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவியும் ஆசிரியையுமான இவர் மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், Jaffna Holy Family Convent இல் சேவை ஆற்றிய இவர் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். இவ்வாறு சகோதரங்கள்,உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15.08.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
மக்கள் சேவையை மனதில் ஏற்று
சிக்கல் அனைத்தையும் சிறப்பாக கையாண்டு
பக்கம் இருந்த பாச உயிரே
சொர்க்கம் அடைந்த சொந்த உறவே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

