நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி இராசையா
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி- பழைய மாணவி, Teacher , முன்னாள் Teacher - மத்திய கல்லூரி, Jaffna Holy Family Convent
வயது 8431 மார்ச், 1935 – 15 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககருவிலிருந்து உன்னை பிறப்பித்தவன் தன்
கருவறைக்குள் உன்னை சேர்த்திட்டான், தக்க
பருவம் பார்த்தின்று வாழ்வை முடிக்கவென்று
உருவம் மறந்து நீ உண்மைக்குள் இப்போது
அருமையாய் பெற்று வளர்த்த உன்
அம்மையின், அந்தயின், பின்னர் சென்றடைந்த
அன்பின் தம்பியின் அரவணைப்பில்
அமைதிக்குள் நீ என்று ஆனந்தம் நமக்கின்று
தென் திசை கிழவனிட்கு நன்றிகள் சொல்கின்றோம்
எண்திசையும் உன் பெருமை அவனோடு ஓங்கட்டும்
பண்ணிசையில் பாடுகின்றோம் பல்லாண்டும் உனை வணங்கி
எண்ணற்ற நன்மைகளை செய்தாயே அதை போற்றி
ஆனந்தக் கண்ணீருடன்
அன்பின் தம்பி
மருத்துவர் நித்தி கனகரத்தினம் மற்றும் குடும்பத்தினர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துடன் கலந்துவிட்ட
எமது அன்பு சகோதரியே உம்மை பிரிந்து வாடுகிறோம்
உமது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்
அன்பு சகோதரர்கள், பெறாமக்கள், மருமக்கள், மைத்துனர், மைத்துனிமார்
எங்களோடு வாழ்ந்து எங்களை எல்லாம் வாழவைத்து நல்வழிகாட்டி எம்மையும் இப்பூவுலகில் புகழுடன் வாழ வழி அமைத்த எங்கள் குல விளக்கு இறப்புச் செய்தி கேட்டு ஓடி வந்து எமக்கு ஆறுதல் கூறியவர்கட்கும் எங்களுடன் துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியை அன்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
— நித்தி கனகரட்ணம், குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 31/MAR/1935 இல் திரு.திருமதி கனகரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமை மகளாய் புவனேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பாலசுப்பிரமணியம், மகேந்திரராஜா ,விவேகானந்தராஜா, பொப்பிசை பிதா நித்தி கனகரெட்ணம், இராஜேஸ்வரி, சிவானந்தராஜா, சாரதா, சாந்தா, தவேந்திரராஜா எனும் உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி இராசையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகன் Bose Retired Police Officer ஆன திரு.ஜோதிரெட்ணம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவியும் ஆசிரியையுமான இவர் மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், Jaffna Holy Family Convent இல் சேவை ஆற்றிய இவர் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். இவ்வாறு சகோதரங்கள்,உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15.08.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
மக்கள் சேவையை மனதில் ஏற்று
சிக்கல் அனைத்தையும் சிறப்பாக கையாண்டு
பக்கம் இருந்த பாச உயிரே
சொர்க்கம் அடைந்த சொந்த உறவே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

