1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜலிங்கம் ராஜா
வயது 631 ஜனவரி, 1956 – 24 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Le Blanc-Mesnil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜலிங்கம் ராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திரும்பும் திசையெல்லாம் உன் நாமம்-ஓடும்
இரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்
உன்வியர்வைத் துளிகள்தான் நாம் படிக்கும் இதிகாசம்
நாடுபல சுத்தி வந்தும் எம் முகம்காண
அநுதினமும் ஓடி வந்தாய் - உன்
அனுபவத்தை எல்லாம் அள்ளித்தந்தாய்
ஒரு ஆசானாய் உலகத்தையே சொல்லித்தந்தாய்
எத்தனையோ துன்பத்திலும் - நீ
யாரையுமே நொந்ததில்லை
நேர்மை வழி போகும் ஒரு தேரானாய் - நாம்
நிலைத்து நிற்க எமக்கு நீ வேரானாய்
வறுமையை நீ சொன்னதில்லை - என்றும்
வாடி மனம் நின்றதில்லை - எதையுமே
தனக்கென்று நீ இறுதிவரை எண்ணவில்லை
பாசத்தால் கண்டித்து பண்பால் புடம்போட்டு
ஒழுக்கமே முகவரி என - எம்
நெஞ்சமதில் எழுதிச்சென்ற ஆசானே
நாட்கள் தான் நகர்ந்தாலும் - எம்மை
வளர்த்த பாசம் தான் மாறாது
ஏழு ஜென்மத்திலும் நாம் பட்ட கடன் தீராது
நீயில்லா இடைவெளியை நிரப்ப முடிதெனினும்
நீதி வழி நடந்த உன் பொற்பாத தடங்களிலே
கண்ணீர் பூக்களால் அஞ்சலி செய்கிறோம்
மனைவி, மக்கள், மருமகள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையின் யாழ்ப்பாணத்தில் 01/Jan/1956 ஆம் ஆண்டில் திரு.திருமதி ராஜா இராசமணி தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.இராஜலிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் சிறுவயதில் அன்பும் பண்பும் கொண்டு ராஜேஸ்வரி, ராஜமலர், ராஜசிங்கம், ராஜகுலேந்திரன், ராஜசேகரம், ராஜராணி போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரு.திருமதி கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளாக சந்திரவதணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக ரஜீவன், ரமேஸ், ரபாயல் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜோயல் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து ஐஸ்வர்யா,ராஜா(சயான்) எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியது மட்டுமல்லாது கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்த மனம் கொண்டவர்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.10.2019 இல் 63 வயதில் பிரான்ஸில் உள்ள Le Blanc - Mesnil நகரில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

