மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரன் நிதர்ஷன்
வயது 234 ஜூன், 1995 – 2 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் நிதர்ஷன் அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசேந்திரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
குணாகரன்(வலயக்கல்வி பணிமனை, முல்லைத்தீவு), சுதாகரன்(லண்டன்), சுதர்சினி(முன் பள்ளி ஆசிரியை), காலஞ்சென்ற நிஷாகரன், நிறோஜினி(ஆசிரியை- கைவேலி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் தெங்கு தோட்டமும் நெல்வயல்களும் மரக்கறி தோட்டம் என்பதுடன் போரின் உச்சம் கண்ட இடமுமான புதுக்குடியிருப்பு கோம்பாவில் 2ம் வட்டாரத்தில் 04-Jun-1995 இல் இராசேந்திரன் மகேஸ்வரி தம்பதிகளுக்கு அருமைப் புத்திரனாக நிதர்ஷன் அவர்கள் அவதரித்தார். சிறுவயதில் குறும்புகள் செய்து குதூகலித்து வாழ்ந்தார்.
இவர் பாசம் நிறைந்த மகனாக மெல்ல மெல்ல வளர்ந்ததுடன் குணாகரன், சுதாகரன், சுதர்சினி, நிஷாகரன், நிறோஜினி போன்ற உடன்பிறப்புகளுடன் அன்பாகவும் பண்பாகவும் வளர்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனாகவும் படிப்பில் திறமைசாலியாகவும், கோம்பாவில் விக்கினேஸ்வரா விளையாடு கழகத்தின் உறுப்பினரும். தீவிர உணர்வாளருமாக இருந்ததுடன் விளையாட்டில்(கால்பந்து) மிக ஆர்வம் கொண்டவராகவும், Abans நிறுவனத்தில் வேலை செய்தவரும், முதியோரை மதிக்கும் குணம் படைத்தவராகவும், உறவினரில் அதிக அன்பும், மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.
இவ்வாறு தந்தை, தாய், சகோதரங்கள் ஊர்ப்பற்று, விளையாட்டு என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02-04-2019 இல் 23 வயதில் கோம்பாவில் விக்கினேஸ்வரா மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மைதானத்தில் மயக்கமுற்று வீழ்ந்து இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"அன்பு மகனே
ஞானக் குழந்தையே
ஆசை நண்பா
இணை பிரியா உறவே
இடையில் எமை
விட்டு பிரிந்து
தவிக்க விட்ட
பாச உயிரே "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

