மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி செல்லத்துரை
வயது 7631 ஆகஸ்ட், 1940 – 23 மார்ச், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, கொழும்பு 13
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஜம்பட்டா வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரத்தினம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தன்(சதா- சுவிஸ்), விவேகானந்தன்(விவே- சுவிஸ்), கலையரசி(உஷா- சுவிஸ்), சிவனாந்தன்(மாத்தையா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தரூபன் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
கஜநிதி(சுவிஸ்), லுஜிதா(சுவிஸ்), ஜெகன்(சுவிஸ்), ரஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிசாத்(சுவிஸ்), சக்ஸ்சனா(சுவிஸ்), நவீன்(சுவிஸ்), திவ்யா(சுவிஸ்), ஜெனிபன்(சுவிஸ்), அபிஷன்(சுவிஸ்), அபிஷேக்(சுவிஸ்), அஸ்வின்(சுவிஸ்), அஜிஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-03-2017 வெள்ளிக்கிழமை மற்றும் 25-03-2017 சனிக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப 10:00 மணிமுதல் பி.ப 4:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 1:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

