ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் வைத்திலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் வைத்திலிங்கம்

வயது 818 அக்டோபர், 1936 – 22 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குஞ்சுப்பரந்தனை வதிவிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை வடக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரன்(பரா- டென்மார்க்), கலைச்செல்வி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஆமி), கிருஷ்ணபிள்ளை(கோமாளி) மற்றும் பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயந்தி(லண்டன்), நடராசா(கிளி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயாளன், கண்ணழகன், கலைவாணி, பாஸ்கரன், பிறிமிலா, சங்கீதா, சீமா, ஷோபா, ஆர்த்தி, சிந்துஜா, லோமதி, தீபா, காலஞ்சென்ற சதீஷ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சுவாமிநாதன்(இ. க. வ கூட்டுதாபனம்), நாகேஸ்வரி(ஆசிரியை), காலஞ்சென்றவர்களான துரைராஜன்(இ. மி. சபை), சுந்தரம்பிள்ளை, துரைராசா(காந்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மணிவண்ணன், யாழினி, புகழினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசன்னா(பிரான்ஸ்), பிரசாந்த்(பிரான்ஸ்), ஜெனாத்தன்(லண்டன்), கிருஷன்(லண்டன்), நிருஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சங்கம் வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.