1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரணராஜன் சபாலிங்கம்
வயது 6012 அக்டோபர், 1955 – 17 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரணராஜன் சபாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான நண்பன் ரணா- எம்
மனங்களை ரணமாக்கி விட்டு
ஓடி மறைந்து ஓராண்டு ஆனதுவோ!
நாடி வந்தோர் நல்ல தேவை உணர்ந்து
நாளும் உதவிய நல்ல மனிதன்
எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் பாங்கு
கல்லையும் கசிய வைக்கும் கனிவான பேச்சு
கரும்பான எங்களின் நட்பு நித்தமும்
மலர்ந்த முகத்துடன் மகிழ்ந்த காலம்
பாசத்திற்கு ஏங்கும் என் அருமைப் பிள்ளைகள்
நேசத்திற்கு காத்திருக்கும் என் அன்பு மனைவி
சந்தித்த இடங்கள் நடந்திட்ட தடங்கள்
இக்காலம் இனி என்றும் வாராதோ?
ஆண்டு முப்பத்தைந்து தொடர்ந்த எம்நட்பு
மீண்டும் வாராதோ என ஏங்கும் தனிமை
ஆறுதல் சொல்ல ஆளில்லா வெறுமை
மாறாத உந்தன் மாசற்ற அன்பை
பேறாக பெற்ற நான், பெருமை கொள்கிறேன்.
கருணாகரனின் சமர்ப்பணம்
எம் ஆரூயிர் நண்பன் றணா
ஓராண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எம் உயிருள்ள வரை
இருந்து கொண்டே இருக்கும்!
நட்பு என்ற வார்த்தைக்கு
இலக்கணமாக வாழ்ந்து காட்டியவன் நீ றணா
எங்களுக்கு நீ நண்பனாக மாத்திரமன்றி
ஆசானாக, வழிகாட்டியாக எங்கள்
குடும்பத்தில் ஒருவனாக இருந்தவன் நீ
பிரிவு என்பதன் சோகம் வலி என்ன? என்பதை
உன்னால் உணர்கிறோம்!
உன்னுடன் நட்பாய் இருந்த காலம்
எம் வாழ்க்கையில் ஓர் பொற்காலம் என்றே எண்ணுகின்றோம்
நாம் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்
உன்னை சந்தித்து இருக்காவிட்டால்
நண்பர்களுக்காக எதையும் செய்யும் நண்பன்
ஒருவன் கிடைத்திருக்க மாட்டான்!
றணா எங்கள் நட்புக்கு என்றும் மரணமில்லை
பிரிய நண்பனே...! உன் உயிருக்குள்
எம் நட்பைக் காப்பாற்றியவனே!
உன் பிரிவினால் எம் இதயம்
எப்போது ஆறுதல் அடையுமோ? தெரியவில்லை!
உன் பிரிவு எம்மை பேதலிக்கச் செய்கின்றது
அதிலும் உன் அன்பின் பிரிவால் - எம்
இதயமே வெடித்துவிடும் போல் இருக்கின்றது!
நண்பன் றணா புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும்
தாயாக மண்ணையும் மக்களையும் இறுதி வரை
நேசித்த ஓர் நல்ல பண்பாளனாக, உணா்வாளனாக, தேசப்பற்றாளனாக
நியூயோர்க்கில் உள்ள மக்களால்
நேசிக்கப்பட்ட ஓர் உன்னதமான
உயர்ந்த மனிதன் நண்பன் ”றணா”
உலகில் எந்த மூலையில் நாம் வாழ்ந்தாலும்
எமது உணர்வுகளும் எண்ணங்களும் சிந்தனைகளும்
எமது தாயகத்தை நோக்கியே அமைய வேண்டும் என்பதற்கு
உதாரண புருசராக வாழ்ந்து காட்டியவர் நண்பன் “றணா"
எம் உயிரில் கலந்திருக்கும் அன்பு நண்பன்
றணா உன் ஆத்மா சாந்தியடைய
உறவினர்கள், நண்பா்கள், எல்லோரும் எங்கள் உள்ளத்தால் வேண்டுகின்றோம்!!!
— கருணாகரன் மற்றும் நியூயோர்க் நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

