ஆறுதல்

நினைவஞ்சலி

இராசையா குமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா குமாரசாமி

வயது 8124 ஏப்ரல், 1938 – 3 நவம்பர், 2019

பிறந்த இடம்
சாவகச்சேரி கல்வயல்
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி கல்வயல், Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வயலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

கல்வயலில் கால் பதித்து களிப்புடனே எமை வளர்த்து
கரு விழிக்குள் மறைந்திருக்கும் கனிவான அப்பாவே
கட்டடத் தொழில் செய்து கரிசனையாய் காத்து எமை
கண்கலங்க வைத்து விட்டு கந்தனடி சேர்ந்தீர்கள்

சிந்தையுடன் எமை வளர்த்து
சிறப்புடனே வாழ வைத்த - உம்மை
விந்தைமிகு தந்தையென்றால்
வியப்பதற்கு ஏதுமில்லை

ஊருக்கு உதவி உற்றார்க்கும் உறுதுணையாய்
பாரிசில் வந்தும் கூட பரிவுடனே பழகியவர்
பேரக்குழந்தைகளை பிரியமுடன் பாதுகாத்தீர்
விரைந்து தான் நீங்களும் விண்ணுலகம் சென்றதேனோ

பாறைனை நாளன்று வேலனை தேடி நீங்கள்
பாசமான உறவுகளை பரிதவிக்க விட்டீர்கள்
மறுஜென்மம் ஒன்றிருந்தால் - அப்பா!
மறுபடியும் வந்து விடுங்கள் எம்மிடமே...

எங்கள் குடும்பத்தலைவர் எங்கள் அப்பாவின் இழப்பின் செய்தி கேட்டு உடன்வந்து உதவியவர்களுக்கும் எங்கள் துயரத்தை பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தந்தையின் வாழ்விடமான கல்வயலில் நடைபெற்ற கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனையை ஒழுங்கு செய்தவர்கள், கலந்து கொண்டவர்களுக்கும், பல வழிகளில் உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக் கிருத்திய கிரியை 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் 34, Rue Jules Maily, 93700 Drancy, France எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 4 நவம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 2 நவம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.