ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசலிங்கம் சத்தியதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசலிங்கம் சத்தியதேவி

வயது 8529 ஜூலை, 1934 – 7 அக்டோபர், 2019

பிறந்த இடம்
ஈச்சமோட்டை
வாழ்ந்த இடம்
இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சத்தியதேவி அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஈச்சமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவகுரு இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம்(முத்துலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

றஜனி(ஜேர்மனி), இராஜினி(இந்தியா), சுதாகரன்(இத்தாலி), றூபினி(ஜேர்மனி), சுதர்ஸன்(உபாகரன்- இத்தாலி), குணசேகரன்(ஐக்கிய அமெரிக்கா), பாவனி(லண்டன்), ஜீவாகரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகானந்தம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(இந்தியா), சாரதாதேவி(கனடா), சத்தியசீலன்(ஜேர்மனி), சந்திரலேகா(இத்தாலி), கார்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), சிவேந்திரன்(லண்டன்), சித்திரா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மல்லிகா(மன்னார்), அம்பிகா(கொழும்பு), நடேசன்(அவுஸ்திரேலியா), சந்திரபிரபா(லண்டன்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யேசுதாசன்(மன்னார்), கிருஸ்னமோகன்(கொழும்பு), இந்திரா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), மற்றும் நவரட்னம் சகுந்தலாம்பிகை(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியசாந்தி துசாந்தன்(ஜேர்மனி), கிரிதரன் சாலினி(ஜேர்மனி), கஜேந்திரன்(கோபி- இந்தியா), துளசிகா வகுராஜ்(ஜேர்மனி), கஜிதரன்(ஜேர்மனி), தினேஷ்(ஜேர்மனி), மதுசேகரன்(இத்தாலி), ஆகாஸ்(ஜேர்மனி), ஆதவன்(கனடா), சாருஜன்(லண்டன்), அகிலா(இத்தாலி), ஜெஸ்மீரா(லண்டன்), காவியா(இந்தியா), சகிலா(இத்தாலி), ஆர்னா(ஐக்கிய அமெரிக்கா), அகானா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்ஜீவிகா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கனுசன்(ஜேர்மனி), சச்சுன்(ஜேர்மனி), அஸ்மிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் ந.ப 12:15 மணிவரை No. 32 Sri Balaji NagarMeppur nazerath Pettai, Poonamallee, Chennai 600123 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் காட்டம்பாக்கத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

உதவி செய்வதில் வல்லவராகவும், அன்பு செலுத்துவதில் நிகரற்றவராகவும் விளங்கிய இராசலிங்கம் சத்தியதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழ் பேசம் மக்கள் அதிகமாக செரிந்து வாழும் யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையில் சிவகுரு இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளாக சத்தியதேவி அவர்கள் 29/JUL/1934 ஆம் ஆண்டு பிறந்தார். மல்லிகா, அம்பிகா, நடேசன், சந்திரபிரபா, ஜெகதீஸ்வரி போன்ற தனது உடன் பிறந்த சகோதாரங்களோடு ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார்.

முழுக் கதையையும் வாசிக்க

தனது திருமண வயதை எட்டியதும் விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனான இராசலிங்கம் என்பவரைத் தனது வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்து மணமுடித்து இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் காரணமாக றஜனி, இராஜினி, சுதாகரன், றூபினி, சுதர்ஸன், குணசேகரன், பாவனி, ஜீவாகரன் ஆகிய செல்வங்களைப் பெற்று நல்ல கருத்துக்களை போதனைகளாகக் கூறி வளர்த்தார்.

தனது பிள்ளைகளுக்கு முருகானந்தம், சச்சிதானந்தம், சாரதாதேவி, சத்தியசீலன், சந்திரலேகா, கார்த்திகா, சிவேந்திரன், சித்திரா போன்ற இவர்களை நல்ல வாழ்க்கை துணைகளாகத் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்த இவர், 1996 இல் இந்தியாவில் குடிபெயர்ந்தார். தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

தனது பாசத்திற்குரிய பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என அனைவரையும் விட்டு 07.10.2019 இல் தனது 85 வயதில் இந்தியாவில் காலமானார்

பிற அறிவித்தல்கள்

  1. 6 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 7 அக்டோபர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.