நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசலிங்கம் சத்தியதேவி
வயது 8529 ஜூலை, 1934 – 7 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
உதவி செய்வதில் வல்லவராகவும், அன்பு செலுத்துவதில் நிகரற்றவராகவும் விளங்கிய இராசலிங்கம் சத்தியதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
தமிழ் பேசம் மக்கள் அதிகமாக செரிந்து வாழும் யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையில் சிவகுரு இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளாக சத்தியதேவி அவர்கள் 29/JUL/1934 ஆம் ஆண்டு பிறந்தார். மல்லிகா, அம்பிகா, நடேசன், சந்திரபிரபா, ஜெகதீஸ்வரி போன்ற தனது உடன் பிறந்த சகோதாரங்களோடு ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது திருமண வயதை எட்டியதும் விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனான இராசலிங்கம் என்பவரைத் தனது வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்து மணமுடித்து இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் காரணமாக றஜனி, இராஜினி, சுதாகரன், றூபினி, சுதர்ஸன், குணசேகரன், பாவனி, ஜீவாகரன் ஆகிய செல்வங்களைப் பெற்று நல்ல கருத்துக்களை போதனைகளாகக் கூறி வளர்த்தார்.
தனது பிள்ளைகளுக்கு முருகானந்தம், சச்சிதானந்தம், சாரதாதேவி, சத்தியசீலன், சந்திரலேகா, கார்த்திகா, சிவேந்திரன், சித்திரா போன்ற இவர்களை நல்ல வாழ்க்கை துணைகளாகத் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்த இவர், 1996 இல் இந்தியாவில் குடிபெயர்ந்தார். தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
தனது பாசத்திற்குரிய பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என அனைவரையும் விட்டு 07.10.2019 இல் தனது 85 வயதில் இந்தியாவில் காலமானார்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

