1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா கனகரத்தினம்
வயது 7923 பிப்ரவரி, 1940 – 18 மே, 2019
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா கனகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று நாளொன்று போல
ஓடி மறைந்தது அம்மா!
பாரினிலே உங்கள் முகம்
ஒரு முறை பாரோமா??
உம் எண்ணங்களும், தியாகங்களும்,
எம் மனக் கூண்டில் உறைந்திட
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆண்டவன் அடியில் அமர்த்துவம்
கொண்ட அன்புத் தாயே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்தாலும்
எம் உயிர் உள்ள வரை மறவோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம்,நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த கச்சாய் வீதி கொடிகாமத்தில் 23/FEB/1940 ஆம் ஆண்டில் கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகளாக இராசம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் சுப்பிரமணியம், தங்கம்மா, இராசையா, நல்லம்மா, மகேஸ்வரிப்பிள்ளை, யோகராசா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான CTB கனகரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து கோமளா, சியாமளா, நரேந்திரன் போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் இரவீந்திரன், மனோகரன், தவராசினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புறச் செய்ததுடன் ரேகிஷன், ரேஷிகா, ஜனார்த்தனன், ஜானுஷா, மானுஷா, நர்த்தனா, வித்தகன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பிள்ளைகள் சிறு வயதில் இருக்கும் போது நாட்டுச் சூழ்நிலையால் கணவனை இழந்த நிலையிலும் பிள்ளைகளின் வளர்ச்சி, உயர்ச்சியில் திறம்பட உறுதுணையாக செயற்பட்டதுடன்,சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 18.05.2019 இல் 79 வயதில் கச்சாய் வீதி கொடிகாமத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"கொடிகாம உறவே
......கொடிக் கொழுந்தே
பாச மலரே
......பண்பு உள்ளமே
பிள்ளைகள் உயர
...... கூடி உழைத்த
பாச உறவே
......பிரிந்து எங்கே போனீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

