ஆறுதல்

கண்ணீர் அஞ்சலி

இராசப்பு அன்ரனி குருஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசப்பு அன்ரனி குருஸ்

வயது 669 ஏப்ரல், 1950 – 8 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
Navaly South
வாழ்ந்த இடம்
Aarau

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசப்பு அன்ரனி குருஸ் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

நவாலி பெற்றெடுத்த நாயகன்
நல்ல ஆற்றல் கொண்ட நம்மகன்
நற்பண்பும் பரிவும் நிறைந்த பண்பாளன்
நேர்மையும் நேர்த்தியுமாய் நடந்திடும் நெறியாளன்

விரல் நுனிதன்னில் இசைதனை
விரிந்திடச் செய்திட்ட விற்பன்னர்
புலம்பெயர் மண்ணில் இசையில்
புதுளமகள் புரிந்த புத்திரன்

இசைக்கருவி எதுவானாலும்
இவர் கரங்களால் இசுந்திடவைத்திடும் இயங்கிலாளர்
ஆராதனை நேரங்களில் தேவாலயங்களெங்கும்
பக்க இசை வழங்கி உற்றதுணை நின்றவர்

இசையில் பல மாணாக்கரை உருவாக்கி
மணிமகுடம் சூடவைத்த மாமன்னர்
சுவிசில் இசைக்கருவிகளை இசைக்கும்
பல இசைக் கலைஞர்கள்
இவர் கரங்களால் தழுவப்பட்டு தரம் உயர்ந்தவர்கள்

எம் மக்கள் நிலை உயர்ந்திட
திருச்சபையுமாக பொதுத் தொண்டாற்றியவர்
புதுமொட்டமைத்து தமிழிசைதனில்
புதுமைகள் புரிந்த புரட்சியாளன்

தன் குழந்தையும் தன் துறைசார்ந்து
வளர்த்தெடுத்த பெரும் தந்தையிவர்
இவர் ஆற்றலையும் அறிவையும் ஆழுமையும்
முழுமையாய் கற்றுத் தேறாமல் தவிக்கின்றதே
ஈழத் தமிழ் கலையுலகு

பண்ணிசை தனை தன்னிசைக் குள்ளாக்கி
நுண்ணிய வித்தைகளை நுனிவிரலில் கெண்டவர்
எண்ணிய எண்ணங்களை இசைக்குள்ளே புகுத்தி
ஏற்றமிகு பாடல்களை எமக்குத் தந்தவர்
மண்ணின் மகிமைதனை மகத்தான இசையமைத்து
மக்கள் மனங்களில் மனதை பகிந்தவர்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கும்,
உற்றார், உறவுகளுக்கும்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன்
பாதங்களுக்கு கண்ணீர் மலர்களை
காணிக்கையாக்குகின்றோம்.

— நவாலியூர் ஜரோப்பிய மக்கள் ஒன்றியம்

பிற அறிவித்தல்கள்

  1. 9 ஆகஸ்ட், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.