கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Rasappu Antony Kurusu
Age 66April 9, 1950 – August 8, 2016
- Born in
- Navaly South
- Lived in
- Aarau
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசப்பு அன்ரனி குருஸ் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
நவாலி பெற்றெடுத்த நாயகன்
நல்ல ஆற்றல் கொண்ட நம்மகன்
நற்பண்பும் பரிவும் நிறைந்த பண்பாளன்
நேர்மையும் நேர்த்தியுமாய் நடந்திடும் நெறியாளன்
விரல் நுனிதன்னில் இசைதனை
விரிந்திடச் செய்திட்ட விற்பன்னர்
புலம்பெயர் மண்ணில் இசையில்
புதுளமகள் புரிந்த புத்திரன்
இசைக்கருவி எதுவானாலும்
இவர் கரங்களால் இசுந்திடவைத்திடும் இயங்கிலாளர்
ஆராதனை நேரங்களில் தேவாலயங்களெங்கும்
பக்க இசை வழங்கி உற்றதுணை நின்றவர்
இசையில் பல மாணாக்கரை உருவாக்கி
மணிமகுடம் சூடவைத்த மாமன்னர்
சுவிசில் இசைக்கருவிகளை இசைக்கும்
பல இசைக் கலைஞர்கள்
இவர் கரங்களால் தழுவப்பட்டு தரம் உயர்ந்தவர்கள்
எம் மக்கள் நிலை உயர்ந்திட
திருச்சபையுமாக பொதுத் தொண்டாற்றியவர்
புதுமொட்டமைத்து தமிழிசைதனில்
புதுமைகள் புரிந்த புரட்சியாளன்
தன் குழந்தையும் தன் துறைசார்ந்து
வளர்த்தெடுத்த பெரும் தந்தையிவர்
இவர் ஆற்றலையும் அறிவையும் ஆழுமையும்
முழுமையாய் கற்றுத் தேறாமல் தவிக்கின்றதே
ஈழத் தமிழ் கலையுலகு
பண்ணிசை தனை தன்னிசைக் குள்ளாக்கி
நுண்ணிய வித்தைகளை நுனிவிரலில் கெண்டவர்
எண்ணிய எண்ணங்களை இசைக்குள்ளே புகுத்தி
ஏற்றமிகு பாடல்களை எமக்குத் தந்தவர்
மண்ணின் மகிமைதனை மகத்தான இசையமைத்து
மக்கள் மனங்களில் மனதை பகிந்தவர்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கும்,
உற்றார், உறவுகளுக்கும்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன்
பாதங்களுக்கு கண்ணீர் மலர்களை
காணிக்கையாக்குகின்றோம்.
— நவாலியூர் ஜரோப்பிய மக்கள் ஒன்றியம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

