ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசு அல்பிறட் ரவீந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசு அல்பிறட் ரவீந்திரன்

வயது 6530 அக்டோபர், 1951 – 29 ஜனவரி, 2017

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை சரவனை மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இராசு அல்பிறட் ரவீந்திரன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசு, மாணிக்கம்(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குருஸ் கிறிஸ்ரினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜேட்றூட்(குஞ்சுக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெஸ்ரின்(பிரான்ஸ்), ஜெறோணி(பிரான்ஸ்), ஜெனாஸ்(இந்தியா) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

ஜனனி(பிரான்ஸ்), லோகினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், தங்கராசா, மற்றும் செல்வேந்திரன்(பிரான்ஸ்), பிறேமா(இந்தியா), மல்லிகா(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), தயா(இலங்கை), நிலா(பிரான்ஸ்), கலா(ஜெர்மனி), ஜெறோம்(பிரான்ஸ்), ஜெறின்(பிரான்ஸ்), நியூட்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லோகா(பிரான்ஸ்), எமிலியானுஸ்(இலங்கை), சந்திரன்(பிரான்ஸ்), ஜெயராசா(பிரான்ஸ்), மதியழகன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(ஜெர்மனி), நிர்மலா(பிரான்ஸ்), அனுபாமா(பிரான்ஸ்), டென்சி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

டிலான்(பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை மடிப்பாக்கம் புழுதிவாக்கத்திலுள்ள லூர்து மாதா கோயிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பாலாஜி நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.