நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் சோமேஸ்வரி
வயது 7510 அக்டோபர், 1943 – 13 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு வந்து உதவி, ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, இணையத்தளங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நெடுந்தீவில் 10/OCT/1943 இல் திரு.திருமதி வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் சோமேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வரத்தினம், கனகரத்தினம், பாலசிங்கம் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகன் திரு. இரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நளாயினி, நந்தினி, யசோதினி, தயாபரன், தனபாலன், சறோஜினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சிறிக்குமார், தேவாகரன், சுதாஸ்கரன், சந்தியவாணி போன்றவர்களைத் திருமணம் முடித்து நமிர்தன், கிசானி, சயாழினி, மோகிதன், ரிசானி, கவின், வருண் போன்ற பேரப்பிள்ளைகளுடம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.08.2019 இல் 75 வயதில் கிளிநொச்சியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
எங்கள் தாயே இன்பத் தாயே
திங்கள் போன்று ஒளிரும் தாயே
எங்கும் நன்மை பரப்பிய தாயே
உங்கள் வாழ்வு கடின வாழ்வே
எங்கள் மீது பாசம் பொழிந்து
எங்கே போனீர் தங்கத் தாயே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

