நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம்மா நடராஜலிங்கம்
வயது 875 பிப்ரவரி, 1932 – 26 மே, 2019
- பிறந்த இடம்
- மடத்தடி
- வாழ்ந்த இடம்
- மீசாலை மேற்கு, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உலக நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த தென்மராட்சியில் நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளுக்கு சிரேஷ்ட மகளாக இரத்தினம்மா அவர்கள் 05/FEB/1932 ஆம் ஆண்டில் இவ் அவனியில் குமாரவேலு, முத்தையா, ஞானாம்பிகை, Dr சிவகுரு, கனகலிங்கம் எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் கார்த்திகேசு நாயகம் தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான நெசவு ஆசிரியர் நடராஜலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஜெகதீசன், ரோகிணி, ஜெயக்குமார், ஜெயபாலன், ஜெயபரன், சித்திரா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் அமெரிக்கா,கனடா,பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்ததுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 26.05.2019 இல் 87 வயதில் மீசாலை மேற்கில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மடத்தடி மண்ணின்
......மங்காத அழகே
மாணிக்க ஒளியே
.......மல்கோவாக் கிளியே
அன்பாகப் பேசும்
.....அன்னை உள்ளமே
அழிந்தது உடல் மனதில்
......நிலைத்தது உருவாய்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

