ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

ரவிச்சந்திரன் சியாமளா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரவிச்சந்திரன் சியாமளா

வயது 3018 பிப்ரவரி, 1978 – 19 அக்டோபர், 2008

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
இத்தாலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Mantova ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா இரவிச்சந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இல்லத்தில் நுழைந்தாய் என் இனியவளே!
இதயத்தில் இரண்டறக் கலந்தவளே
நான்காண்டு காலம் என்னுள் இருந்தவளே - இன்னும்
வாழாண்டு காலம் வரை என்னோடு வாழ்பவளே!

கண்ணுக்குள் உன் விம்பம் அசைகையிலே
கண்ணீரில் நாமிங்கு மூழ்கின்றோம்
விண்ணுக்குள் நீ நின்று விசமம் செய்ய
மண்ணுக்குள் எம் ஆத்மா அழுகின்றது

கண்ணோடு நீ இங்கு வருகையிலே
கரையவில்லை உன் விம்பம் அது காதலடி

விலைபேசி பெற்றனனோ காலனவன் - இல்லை
வினைகொண்ட மருத்துவன்தான் கொன்றனனோ
பலதிக்கும் உன் ஓசை பண்ணிசைக்க
பாரினிலே எம் வாழ்வு கசக்குதடி

செல்லமாய் சியா என அழைத்தால் போதும்
செவிசாய்த்து மகிழும் விதம் நாமறிவோம்
பொல்லார்க்கு கேட்டது போல் உன்னுயிரை
பொறியிட்டு அழைத்தாரோ இப்பூமிவிட்டு
வாழ்கின்றாய் என உன் பிறப்புகள் ஓலமிட
வாராயோ என நாம் வாடி நிற்க
வந்து எம் வாசலில் வசந்தம் தர
வாராயோ என்னவளே என் சியாவே!
என்றும் உன் நினைவால் ஏங்கித் தவிக்கும்

— கணவன், பெற்றோர், சகோதரர்கள்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 19 அக்டோபர், 20091ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.