2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ravichandran Siyamala
Age 30February 18, 1978 – October 19, 2008
- Born in
- Chavakachcheri
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Mantova ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா இரவிச்சந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லத்தில் நுழைந்தாய் என் இனியவளே!
இதயத்தில் இரண்டறக் கலந்தவளே
நான்காண்டு காலம் என்னுள் இருந்தவளே - இன்னும்
வாழாண்டு காலம் வரை என்னோடு வாழ்பவளே!
கண்ணுக்குள் உன் விம்பம் அசைகையிலே
கண்ணீரில் நாமிங்கு மூழ்கின்றோம்
விண்ணுக்குள் நீ நின்று விசமம் செய்ய
மண்ணுக்குள் எம் ஆத்மா அழுகின்றது
கண்ணோடு நீ இங்கு வருகையிலே
கரையவில்லை உன் விம்பம் அது காதலடி
விலைபேசி பெற்றனனோ காலனவன் - இல்லை
வினைகொண்ட மருத்துவன்தான் கொன்றனனோ
பலதிக்கும் உன் ஓசை பண்ணிசைக்க
பாரினிலே எம் வாழ்வு கசக்குதடி
செல்லமாய் சியா என அழைத்தால் போதும்
செவிசாய்த்து மகிழும் விதம் நாமறிவோம்
பொல்லார்க்கு கேட்டது போல் உன்னுயிரை
பொறியிட்டு அழைத்தாரோ இப்பூமிவிட்டு
வாழ்கின்றாய் என உன் பிறப்புகள் ஓலமிட
வாராயோ என நாம் வாடி நிற்க
வந்து எம் வாசலில் வசந்தம் தர
வாராயோ என்னவளே என் சியாவே!
என்றும் உன் நினைவால் ஏங்கித் தவிக்கும்
— கணவன், பெற்றோர், சகோதரர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

