ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

ரேணுகா தவயோகராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரேணுகா தவயோகராஜன்

வயது 3513 செப்டம்பர், 1980 – 9 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
Sangarathai
வாழ்ந்த இடம்
East Ham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா தவயோகராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உங்கள் நினைவுகளால் நித்தமும்
கலங்குகின்றோம் அம்மா!

ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
என்னை என்றும் வாட்டுதையோ!
ஆறா துயர் தந்து மீளாத்துயில்
கொண்டாய் - நீ வருவாய் என்று
நான் காத்திருந்த காலங்கள் போய்
இன்று ஆண்டு இரண்டாகி விட்டது

இரண்டாண்டு என்ன?
ஈராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்

உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....

கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலனவன் உங்களை அழைத்துவிட்டான்
உங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலத்தின் மடியில் துயில் கொள்ளும்
உங்களை தினம் தினம் நினைத்து
ஒன்று கூடி நாங்கள் உறவாடும் போது
எங்கள் மத்தியில் நீங்களும் வந்து
உறவாடுவீர்கள் என்று நம்புகின்றோம்!

உறவுகளை கட்டி அணைக்கும்
உயர்ந்த பண்பினாலும், கபடமற்ற சிரிப்பினாலும்
நேர்மையான செயல்களாலும் எல்லோர் மனதிலும்
இடம் பிடித்து மறைந்தும், மறையாது வாழும் தாயே !
நெஞ்சடைக்கும் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டே

எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!

— கணவர், பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 11 பிப்ரவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 19 பிப்ரவரி, 2016நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 6 மார்ச், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஜனவரி, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.