மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாம்பசிவம் தியாகலிங்கம்
இளைப்பாறிய அதிபர்- நாரந்தனை கணேச வித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம், முன்னாள் ஆசிரியர்- மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை
வயது 6821 டிசம்பர், 1950 – 7 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கரம்பன் மேற்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை மேற்கு, நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும், நல்லூர் சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் தியாகலிங்கம் அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம், நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீஜா, சிந்துஜா(மக்கள் வங்கி, யாழ் பிராந்திய அலுவலகம்), கீதாஞ்சலி(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹர்சன்(மக்கள் வங்கி, நெல்லியடி), தனஞ்செயன்(பொறியியலாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தில்லைநாயகி, திருமூலநாதன், திலகவதி(இந்தியா), திருநாமச்சண்முகம்(ஜேர்மனி), தியாகேஸ்வரி(பிரித்தானியா), திருமலைநாதன்(பிரித்தானியா), திருக்கேதீஸ்வரன்(பிரித்தானியா), திருமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், மலர்மகள், செல்வரட்ணம்(சின்னப்பா- இந்தியா), கலாமதி(ஜேர்மனி), சக்திவேல்(பிரித்தானியா), ஆனந்தி(பிரித்தானியா), சத்தியநாதன்(பிரித்தானியா), மன்றுளாடி, ஸ்ரீகாந்தன்(பிரித்தானியா),ஜெயஸ்ரீ, காலஞ்சென்ற ஸ்ரீராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாகவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த கரம்பன் மேற்கில் 21/DEC/1950 இல் திரு.திருமதி சாம்பசிவம் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தியாகலிங்கம் அவர்கள் தில்லைநாயகி, திருமூலநாதன், திலகவதி, திருநாமச்சண்முகம், தியாகேஸ்வரி, திருமலைநாதன், திருக்கேதீஸ்வரன், திருமலர் எனும் உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சிவசிதம்பரம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகள் ஸ்ரீதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஸ்ரீஜா, சிந்துஜா, கீதாஞ்சலி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஹர்சன், தனஞ்செயன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து யாகவி எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையில் ஆசிரியராகவும், நாரந்தனை கணேச வித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் போன்றவற்றில் அதிபராக கடமையாற்றி இளைப்பாறியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளை, சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.08.2019 இல் 68 வயதில் நல்லூரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அறிவுச் சிகரமே அன்புக் கடலே
நெறி தவறாது நேர்மையுடன் வாழ்ந்து
சிறு பிழை ஏதும் மனதால் செய்யாது
குறிக்கோள் அடைந்து குலத்தினை வளர்ந்து
நெஞ்சில் உறைந்த நேர்மை ஆசானே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

