ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தர்மகர்த்தா, சித்தப்பா கடை உரிமையாளர்- திருநகர்

வயது 7920 டிசம்பர், 1936 – 6 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
Thirunagar

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரகலாதன், பிரேம்குமார்(மாவட்டச் செயலகம்- கிளிநொச்சி), துஷ்யந்தன்(பொறியியலாளர்), அம்பிகை(மாவட்ட வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னாச்சிப்பிள்ளை(ஆசிரியை), வேலுப்பிள்ளை(விரிவுரையாளர்- பாலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி), நேசரத்தினம், இராமச்சந்திரன், குணநாயகம்(முகாமையாளர் ப.நோ.கூ.சங்கம்- காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, சரஸ்வதி, இராசம்மா, மற்றும் புவனேஸ்வரி, செல்வநாயகி(கரைச்சித் தெற்கு ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பூங்கோதை, இராஜரஞ்சினி(ஆசிரியை- இந்துக் கல்லூரி), சுதர்சினி, சுகந்தன்(பிரதேச செயலகம்- சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஸ்ணவி, அபிசேக், அஸ்வின், சஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 231,
திருநகர்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.