மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரவதனா சண்முகராஜா
வயது 692 டிசம்பர், 1949 – 7 மே, 2019
- பிறந்த இடம்
- பண்ணாகம்
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனா சண்முகராஜா அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞசென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசன்னா அவர்களின் அன்புத் தாயாரும்,
Dr. அமன்டா அவர்களின் அன்பு மாமியாரும்,
பாக்கியநாதன் ராணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
ரேயா, ஈஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற அற்புதமலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாதசுந்தரம்(கனடா), பங்கையற்செல்வி(இலங்கை), ஸ்ரீரஞ்சனி(கனடா), ஸ்ரீலோசினி(கனடா), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மச்சாளும்,
புஸ்பராணி(கனடா), கிருஸ்ணதாசன்(இலங்கை), நித்தியானந்தன்(கனடா), ஸ்ரீகுமார்(கனடா), தர்ஷினி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நாகம்மா, மகேசன் மற்றும் காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பண்ணாகத்தில் 02/DEC/1949 ஆம் ஆண்டில் அருளம்பலம் இராசம்மா தம்பதிகளுக்கு அன்பு மகளாக சந்திரவதனா அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் சிவசுப்பிரமணியம்,அற்புதமலர், பாஸ்கரன் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அழகிய ஆண் மகனான சண்முகராஜா என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிரசன்னா எனும் அன்பு நிறைந்த பிள்ளையை பெற்று கண்ணெனக்காத்து வளர்த்ததுடன், Dr.அமன்டா அவர்களை திருமணம் முடித்து வைத்து மாமிக்குரிய கடமையை சிறப்பாக செய்ததுடன்,ரேயா, ஈஷா போன்ற பேரப்பிள்ளைகளை தூக்கி வளர்த்து இனிமையாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறையில் சிறப்புப் பட்டம் முடித்த பட்டதாரியாவார், அத்துடன் பட்டப்படிப்பின் இறுதியில் ஈழத்தின் பிரபல கவிஞர் மஹாகவி பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி சமர்ப்பித்து சிறப்புப் பாராட்டையும் பெற்றதுடன். தனது குடும்பத்தில் அன்பு கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளை,மருமகள்,நண்பர்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.05.2019 இல் 69 வயதில் லண்டனில் உள்ள Harrow நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"பண்ணாகம் தந்த
......பண்பான உறவே
படிப்பில் உயர்ந்த
......பாச உறவே
பாரில் மிளிர்ந்த
.....பௌர்ணமி நிலவே
பாதியில் பிரிந்து
பரிதவிக்க விட்டதேன்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

