ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்லையா நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா நடராசா

யாழ் முன்னாள் ஐக்கிய வியாபார சங்க காசாளர்

வயது 8319 ஜூன், 1926 – 21 ஏப்ரல், 2010

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராசா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அழைப்பதும், அழகான வாழ்வதும் எங்களின் சொந்தமாக
இன்பான துணையே! உங்களின் உயர்வாக எங்களின் சொத்தாகவே
நித்தமும் நாம் வாழும் நிம்மதி சேர்ந்திட்ட நிலையான வாழ்வு தானும்
காலனின் கண்பட்டு கரைந்துமே போனதால் கலங்கிடும் காலமாச்சே

அந்த ஓர் நிலை வந்து ஆண்டுகள் போனதோ அவலமே நிலையானதோ
ஆண்டுகள் நாலுதான் கடந்திட்ட போதிலும் அதிர்வுகள் நீங்கவில்லையே
தாங்கிடும் துன்பமாய் இருந்திருந்தால் தரணியில் நாமதை தாங்கி நிற்போம்
எந்தனின் நிலை கண்டு இன்னுமோர் கணமேனும் இங்குதான் வரவில்லையே

அந்த ஓர் நிலை இன்றில் ஐயா நான் அவனியில் எப்படி வாழ்ந்திருப்பேன்
ஆரு தான் இருந்தாலும் உங்களின் துணை இன்றில் அயராத துயரம் தானே!
ஏங்கிடும் அன்பிற்கு எல்லையில்லை எங்களின் தெய்வமே நாங்களிங்கே
நாளிலும் பொழுதிலும் வாடுகின்றோம் நானிலம் தன்னிலே அமைதி இன்றி

உங்களின் அன்பிற்கு என்றுமே தான் உவமையே உலகினில் இல்லையன்றோ
கன்னக் கதுப்போரம் என்றுமே தான் களவோடு நடமிடும் புன்சி்ரிப்பு
எண்ணக் குறையாத இனிய அன்பும் ஏகமாய் அழைத்திடும் பாச ஊற்றும்
யாரிடம் நாமிங்கு காணலாமோ நானிலம் தன்னிலே கடந்து போச்சே

துள்ளித் திரிகின்ற துடுக்கடக்கிப் பள்ளிக்குப் போகவே வைத்த அன்பும்
பாதிவழி வரும் வேளைதன்னில் எம்மை மீதி வழி தன்னில் தூக்கி வந்து
அள்ளியே தந்திட்ட முத்தங்களே! அதற்கிங்கு ஈடிணை இல்லையென்போம்!
எண்ணவே மனமது இனிக்கின்றது எங்களின் அப்பாவே உங்கள் அன்பை

என்றென்றும் எங்களின் ஒளிவிளக்காகவே உயிர் தந்த தெய்வமே நீங்கள்
வாழ்விலே நாம் உயரவே வகைசெய்ய உருகிடும் மெழுகென வாழ்ந்ததாலே
உங்களை நீங்களே ஒறுத்துமே வாழ்ந்திட்ட உயரவினை என்னவென்வோம்
எங்களின் வாழ்வினில் இனிமையதோர் தியாகச்சுடர் எங்களின் அப்பா தானே

வாழ்கின்ற நாளெல்லாம் உங்களின் நினைவுகள் மனதினில் நிறைந்து நிற்க
நீளுலகில் உங்களின் நினைவுடன் நாங்களும் நிமலனடி தொழுது நிற்போம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றென்றும் உங்கள் நினைவெனும் நிழலில் தோய்ந்து நிற்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினா்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 ஏப்ரல், 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 19 மே, 2010நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஏப்ரல், 20155ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 30 ஏப்ரல், 20177ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.