நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா அமிர்தலிங்கம்
B.sc(Lond), இளைப்பாறிய பௌதீகவியல் ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி, இளைப்பாறிய உப அதிபர்- இந்துக் கல்லூரி உரும்பிராய்
வயது 856 ஜனவரி, 1934 – 29 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது ஆருயிர் தந்தை மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும்,கண்ணீர் அஞ்சலி பிரசுரமும், வரலாறும் வெளியிட்ட லங்காஸ்ரீ இணையதள Rip book குழுவிற்கும், அதன் வாயிலாக அஞ்சலி தெரிவித்த உறவுகளுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
கிளிநொச்சியில் பசுமை நிறைந்த நெல்வயல்களைக் கொண்ட அழகிய இடமும், அதிகம் படித்த மக்களைக் கொண்ட பிரதேசமான பூநகரி நல்லூரில் 06/Jan/1934 இல் திரு திருமதி செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி ஆனந்தர் செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரி மீனலோஜினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து லதா, அருணன், கீதா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து பிரபாகரன், கேதாரநாயகி, ஜெயலிங்கம் என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து நிவேதிதா, தினேஷ்கரன், விசாகசரன், கௌசிகன் போன்ற அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்து B.SC(LOND)பட்டம் முடித்த இவர் இராமநாதன் கல்லூரியில் பௌதீகவியல் ஆசிரியராகவும், உரும்பிராய் இந்துக்கல்லூரியில் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வினைப் பெற்ற இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.06.2019 இல் 85 வயதில் கொழும்பு நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கல்வியில் சிறந்த
காலத்தின் மங்கா ஒளியே
செல்லமாய் பேசி
செந்தமிழில் உரையாடி
வெல்லம் போல் தித்தித்து
விடைபெற்றீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

