1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை றஜீவன்
வயது 3726 ஆகஸ்ட், 1982 – 28 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- Frauenfeld
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frauenfeld ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை றஜீவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமானவரே, நிலவாய்
எங்கள் வாழ்வில் ஒளி வீசுனாய்,
என்றும் எம் இதயத்தில்
அழியா உருவம்கொண்டு
எங்கள் அன்பு தெய்வமாய்
வலம் வந்தாய்,
என்றும் காண்போமோ உன் முகம்,
உன் முகம் காண
ஏங்கி தவிக்கிறது எங்கள் உள்ளங்கள்...
உன் உறவை இழந்து துணையின்றி
நிர்கதியாய் நிற்கின்றோம்
விதியோ, சதியோ எம்மை பிரித்துவிட்டது
இனி என்று காண்போமோ உன் முகம்
இன்னும் எத்தனை ஜென்மங்கள்
சென்றாலும் உங்களை எங்கள் இதயத்தில்
வைத்து பூசிப்போம்,
எங்கள் அன்பானவரே உங்கள் நினைவுகள்
என்றும் எம் வாழ்வில் நிழலாக தொடரும்..
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் கைதடியில் 26/ AUG/1982 இல் செல்லத்துரை யோகராணி தம்பதிகளின் அன்பு மகனாய் றஜீவன் அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
பாமினி, தமிழினி, சஞ்ஜீவன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் குணராஜா தயாநிதி தம்பதிகளின் அன்பு மகளான அகிலா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தவின், அர்வின் எனும் பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பிரியங்கா, பிறேமிக்கா, வர்ணிகா, மயூரிகா, விஷான் போன்றவர்களுக்கு திருமணம் முடித்துவைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.08.2019 இல் 37 வயதில் சுவிஸில் காலமானார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

