1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை விக்கினராஜா
முன்னாள் உரிமையாளர்- Sivathurka Transport- Jaffna, Sivathurka News- London
வயது 6713 செப்டம்பர், 1949 – 12 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை விக்கினராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவாக எமக்கு அவதரித்து கடமையில் கண்ணாக இருந்தீர்கள்
அப்பா நீங்கள் விடுமுறை சென்றிருப்பதாக மனதை ஆறுதல் படுத்தினாலும்
சில தருணங்களின் நெஞ்சே வெடித்து விடும் போன்று இருக்கிறது
வேலைக்கு செல்லும் போது Trainல் இருப்பவர்களை மறந்து கண்களில் கண்ணீர்
காலையில் எம் பிள்ளைகள் தாத்தாவின் Carல் பாடசாலை
செல்ல காத்திருந்த போது சிங்கம் போல் வருவீர்கள் அப்பா
அந்த பிஞ்சு போன்ற மனமுள்ள உங்கள் பேரப்பிள்ளைகளை
விட்டுப் பிரிய எப்படி உங்களால் முடிந்தது உங்கள் மனைவி
பிள்ளைகள் மட்டுமல்ல எத்தனையோபேரின்
கண்களை நனைத்து விட்டது உங்களின் பிரிவு!
அப்பா நீங்கள் கோபப்பட்டாலும் அடுத்த கணம்
அதை விட பன்மடங்கு அன்பாக இருப்பீர்கள்
இந்த இயந்திரமான வாழ்க்கையிலும் உங்களின் செய்தி
கேட்டதும் எத்தனையோபேர் எம்மைத் தேடி வந்தார்கள்
அது நீங்கள் எல்லோர்மேலும் காட்டி வந்த அன்பே காரணம்
இறுதியாக எம்முடன் சிரித்து பேசிய போது
அதுதான் நாம் பேசும் இறுதி நாள் என்று
ஒரு கணமேனும் நினைத்து பார்க்கவில்லை அப்பா!
முயற்சி உழைப்பு இறைபக்தி தொண்டு என்று
இவையெல்லாவற்றுக்கும் உதாரணமாக வாழ்ந்தீர்கள்
நீங்கள் எம்முடன் பழகிய அந்த அன்பான தருணங்களை
நினைத்தால் கண்ணீர் கொட்டுகிறது!
அப்பா உங்களின் பெருமை சொல்ல எம் வாழ்நாள் போதாது
எம்மை விட்டு பிரிந்து எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
மறக்குமா எம்மனம் உங்களை. எமது வீட்டு சிங்கராஜாவின்
இனிய நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!
உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

