31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா இலகுப்பிள்ளை
இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை
வயது 8230 செப்டம்பர், 1929 – 30 ஜூன், 2012
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 4ம், 7ம் வட்டாரங்களைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை, இலகுப்பிள்ளை நாகம்மா ஆகியோரின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்களை அன்போடும், பண்போடும், பாசத்தோடும்
அரவணைத்து பாதுகாத்து வந்த - எங்கள்
இதய தெய்வங்களின் திடீர் மறைவை எண்ணி
மனம் உடைந்து வாடி நிற்கின்றோம்.
கண்மூடி திறக்கு முன்பே காலவன் உங்களை
கவர்ந்து சென்றது ஏனோ???
நீங்கள் இல்லாத வீட்டில் புன்னகையும் மறைந்து
வசந்தங்களும் தொலைந்து போய்விட்டதே அப்பா!
உங்கள் உறுதியான புத்திமதிகளும்
கனிவான பேச்சும் இனி எப்போது கேட்போம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
கண்ணீர்ப் பூக்களால் பிரார்த்திக்கின்றோம்.
அன்னார்களின் மறைவுச்செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி , மின்னஞ்சல் ஊடாகவும் எமக்கு ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் அன்னாரது இறுதிக்கிரியைகளிலும் கலந்துகொண்டவர்களுக்கும் எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னார்களின் 31 ஆம் நாள் நிகழ்வுகள் 05-08-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12.00 மணிதொடக்கம் பி்.ப 03.00 மணிவரை No.36 Masoonav, Herrow, HA3 5AR இல் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெறும், அத்தருணம் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னார்களின் ஆத்மசாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் பங்கு பற்றும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
— இலகுப்பிள்ளை கோணேஸ்வரமூர்த்தி
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

