ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகநாதன் தவநிதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகநாதன் தவநிதி

வயது 3512 பிப்ரவரி, 1984 – 3 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
Wembley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் பலகாடைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley Alperton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தவநிதி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நேசினி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கதிரவேலு, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பாலாவோடையைச் சேர்ந்த குமாரவேலு வேலுப்பிள்ளை(கு.வே) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாநிதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

நேர்த்திரானந்தன், தனபாலசுந்தரம், லோகநாதன், பேரின்பநாயகம், குமாரலிங்கம், மோகனாம்பிகை, இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சரோஜினிதேவி, தவமலர், சிவாம்பிகை, ராஜலட்சுமி, சிவபாதசுந்தரம், சிவசோதி ஆகியோரின் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களைக் கொண்டதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஈழத்து சிதம்பரம் அமைந்த இடமான காரைநகரில் 12/FEB/1984 இல் திரு.திருமதி கதிரவேலு விஜயலட்சுமி தம்பதிகளின் அருமை மகளாய் தவநிதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தயாநிதி எனும் உடன்பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குமாரவேலு வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனான சண்முகநாதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நேசினி, நிரோஷன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்03.08.2019 இல் 35 வயதில் பிரித்தானியாவில் உள்ள Wembley நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

இளமை வாழ்வில் எமைப் பிரிந்து
வழமை அன்பை இழந்து தவிக்கவிட்ட
கள்ளம் அற்ற கனிவு உள்ளமே
வெள்ளை மனம் வெதும்பி நோக
பள்ள இதயம் நொருங்கி உடைந்ததே

பிற அறிவித்தல்கள்

  1. 12 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 7 ஆகஸ்ட், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.