நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் தவநிதி
வயது 3512 பிப்ரவரி, 1984 – 3 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களைக் கொண்டதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஈழத்து சிதம்பரம் அமைந்த இடமான காரைநகரில் 12/FEB/1984 இல் திரு.திருமதி கதிரவேலு விஜயலட்சுமி தம்பதிகளின் அருமை மகளாய் தவநிதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தயாநிதி எனும் உடன்பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குமாரவேலு வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனான சண்முகநாதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நேசினி, நிரோஷன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்03.08.2019 இல் 35 வயதில் பிரித்தானியாவில் உள்ள Wembley நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
இளமை வாழ்வில் எமைப் பிரிந்து
வழமை அன்பை இழந்து தவிக்கவிட்ட
கள்ளம் அற்ற கனிவு உள்ளமே
வெள்ளை மனம் வெதும்பி நோக
பள்ள இதயம் நொருங்கி உடைந்ததே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

