ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாரிகா செல்வநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாரிகா செல்வநாயகம்

வயது 4630 ஜூலை, 1969 – 22 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கரம்பன்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

சாரிகாவே! எந்தன் இன்னுயிர்த் துணைவியே!!
மலை போல் துயர்வரினும்
மயங்கா உறுதி தந்தவளே!
சிலை போல் நான் இப்போ
சித்தமின்றித் தவிக்கின்றேன்!
அலை போல் உன் நினைவு
அசைந்தசைந்து வருவதென்ன?

வாழ்வு தந்தாய் எனக்கு, வளமும் தந்து நின்றாய்!
தாழ்வு என்பதன் தாற்பரியம்
உணராதிருக்கச் செய்தாய்!
பாழ் நெஞ்சம் இப்போ
படும் துயரம் யார் அறிவார்?

மண வாழ்வின் பெருமையினால்
மணிகள் மூவர் வந்தனர் நமக்கு!
குணமாக வாழ்ந்திருந்தோம்
குடும்பத்தில் சுகமாக!
கணநாதன் கருணையினால்
களிப்புடனே வாழ்ந்த வாழ்வு
எமதூதன் வருகையினால்
உடைந்ததுவே உருவமற்று!

ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?..!!

பேச்சினிலே நீங்கள்!- சுவாசிக்கும்
மூச்சினிலும் நீங்கள்!
எதிலுமே நீங்கள்! எல்லாமே நீங்கள்!!!!!
எம் தெய்வமே! உங்கள் ஆத்மா சாந்தி பெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 22 ஏப்ரல், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 19 மே, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 9 மே, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.