ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி தேவநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி தேவநாயகம்

ஓய்வுபெற்ற கணக்கியல் முகாமையாளர் - Kundanmals LTD

25 டிசம்பர், 2016

பிறந்த இடம்
இடைக்காடு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தேவநாயகம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(ஞானம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலாம்பிகை, திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதாரகௌரி அவர்களின் அன்பு மாமனாரும்,

சற்குணம், இராமகிருஸ்ணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகரூபன், ரூபவல்லி, அனுசூயா, அனுரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

அனுஷா, காசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Brarney Raymond ,121 D. S. Senanayake Mawatha, Colombo - 08 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொது கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.