1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி முத்துத்தம்பி
வயது 9220 பிப்ரவரி, 1927 – 18 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி முத்துத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த
எம் தெய்வமே...
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் சுதுமலையில் புகழ் பூத்த சீமான் திரு.சின்னத்தம்பி அவர்தம் பாரியார் திருமதி தில்லைவனம் அவர்களின் அருமைப் புத்திரனாக 20/FEB/1927 ஆம் ஆண்டில் திரு.முத்துத்தம்பி அவர்கள் இவ் அழகிய பூமியில் தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், சித்தங்கேணியைச் சேர்ந்த திரு.திருமதி மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் மீனாட்சிப்பிள்ளை அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக உமாதேவி, கண்ணதாசன், சிவதேவி, தில்லை நடராஜன், தில்லைக்கரசி, விக்னேஸ்வரன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து டானியலா, சந்திரசேகர், தனுஜா, கருணலோலன், சங்கீதா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கௌசிக், அபிராமி, அபிஷேக், அஸ்மிதா, ஆரபி, ஆதவன் போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சின்னட்டித்தம்பி எனவும் அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 18.06.2019 இல் 92 வயதில் தெஹிவளை நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"சுதுமலை மண்ணின்
......சுடர் ஒளியே
பதுமைக் குணமே
......பாச உயிரே
எது வரினும்
.....அஞ்சாத உறவே
அற்புதம் ஆற்றி
.....அகிலம் துறந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

