ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி துரைராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி துரைராஜா

இளைப்பாறிய நீர் பாசனத்துறை அலுவலர்(PWD)

வயது 942 ஜூலை, 1924 – 4 மே, 2019

பிறந்த இடம்
யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடி சீனிவாசகம் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைராஜா அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நாமுத்து தம்பதிகளின் அருமைப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(கொழும்பு), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரங்கனாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலஷ்மி(கனடா), விஜயகுமார்(லண்டன்), நவேந்திரா(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

உமைபாலன்(கனடா), அனுஷயா(லண்டன்), பிறேமாவதி(கனடா), நாகேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி, வித்தியா, பிரசன்னா, சிந்துஜா, ராஜ்குமார், வினோத்குமார், அஷ்வினி, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

நேகா, ஆரியானா, ரீஷ், அனன்யா, ஆன்யா ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.கொட்டடி சீனிவாசகம் தெருவில் 02/JUL/1924 இல் சின்னத்தம்பி நாமுத்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக துரைராஜா அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன்,விசுவலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகள் ரங்கநாயகி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து விஜயலஷ்மி, விஜயகுமார், நவேந்திரா, சாவித்திரி ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன்,உமைபாலன், அனுஷயா, பிறேமாவதி, நாகேஸ்வரன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன்,காயத்திரி, வித்தியா, பிரசன்னா, சிந்துஜா, ராஜ்குமார், வினோத்குமார், அஷ்வினி, வர்ஷினி போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் படித்து உயர்நிலை அடைந்ததுடன்,நீர்பாசனத்துறை அலுவலராக(PWD) சேவை செய்து ஓய்வு நிலை அடைந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.05.2019 இல் 94 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

""குல விளக்கே
.....ஒளி வெள்ளமே
குங்கும நிறமே
......குல தெய்வமே
அறிவின் ஊற்றே
....இரக்க குணமே
எம்மை விட்டு
....எங்கே சென்றீர்""

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.