ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை சண்முகராஜா

வயது 6725 டிசம்பர், 1951 – 10 ஜூலை, 2019

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
நிலைத்திருக்கும்

வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!

உங்களை எதிர்பார்த்திருக்கும்
இந்த நாட்களின்
வலியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

அப்பா !நாங்கள் இன்னும் - பல
இளவரசர்களை காணக்கூடும்!
ஆனால், நீங்கள் தான் எங்களுக்கு
எப்போதும் “அரசன்!”

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் படித்த மக்களை கொண்டதும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய கோண்டாவிலில் 25/DEC/1951 இல் திரு.திருமதி வல்லிபுரம் சின்னத்துரை இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.சண்முகராஜா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பூபாலராஜா, செல்வராணி, கமலராணி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி தம்பிமுத்து மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகள் அன்னலட்சுமி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சுகந்தி,சுதாகர்,செந்தூரன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று சண்முகதாஸ், நிதிலா, கீதா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து பூமிஜா, பிரணவி, றெய்ஜா, றேனுஜன், ஆருஜன், ஆர்னா, கிறிஸ்னி, தீபிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் தன்நலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.07.2019 இல் 67 வயதில் கோண்டாவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அகரம் புகட்டிய அன்பு உள்ளமே
நிகரில்லாத் தந்தை உருவே
கரம் பற்றி நடந்து
பகருவாய் பாச மொழிகள் பல
சிகரம் தொட்டு சிரம் தாழ்த்தி வணங்கிறோம்

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 7 ஜூலை, 20223ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.