ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை துரைராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை துரைராஜா

உரிமையாளர்- ABRAJ Pvt Ltd

வயது 6826 செப்டம்பர், 1947 – 17 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணன், கொழும்பு கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை துரைராஜா அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சகுந்தலை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சித்(அவுஸ்திரேலியா), ஜசிந்தா(பிரித்தானியா), Dr. கார்த்திகா(பிரித்தானியா), Dr. பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகராசா, காலஞ்சென்ற சிங்கராசா, சிவராசா(சுவிஸ்), தேவராணி(பிரித்தானியா), இன்பராணி(சாரா- கனடா), சரோஜினிதேவி(நியூசிலாந்து), கமலாதேவி, ரவீந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காருண்யா(அவுஸ்திரேலியா), சொசேல்(பிரித்தானியா), Dr. சிறீநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரோகி, அவிக்னா, அட்விகா, ஆராதியா, ஆர்யேஷ், அம்ரித்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 8, ஆதர்ஸ் இடம்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.