நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை பொன்னாச்சி
வயது 10223 அக்டோபர், 1916 – 10 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- உண்ணாப்புலவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியோர், அனைத்து வகையிலும் உதவி செய்தோர் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய மாவட்டமும், நிறைந்த காடுகளும், குளங்களும்,கேணிகளும் அதிகமாக உள்ள வவுனியாவில் நெற்செய்கை சிறப்பாக நடைபெறும் இடமும்,பழவகை,மரக்கறித்தோட்டம், பயன்தரு மரங்கள் என சிறப்பு வாய்ந்த நெடுங்கேணியில் 23/Oct/1916 இல் திரு.திருமதி வீரவாகு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாய் பொன்னாச்சி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சீதேவி, சிவக்கொழுந்து, அழகம்மா, விணாயர், சுப்பிரமணியம் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சிதம்பரப்பிள்ளை எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக இராசம்மா, குலராசசிங்கம், சேனாதிராசா, பரமேஸ்வரி, பூமணி, சிவநாதன், கமலராணி, இந்திராணி, புஸ்பராணி, திருச்செல்வம் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து வல்லிபுரநாதன், சரஸ்வதி, கற்பகம், தர்மபாலன், தில்லைநடராசா, பவானி, குணசிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா, ஜெயவனித்தா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து அன்பும் அழகும் கொண்ட பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.09.2019 இல் 102 வயதில் முல்லைத்தீவில் உள்ள உண்ணாப்புலவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
"நீண்டு வளர்ந்த நெடுமரமே
பாசம் பொழிந்த பாட்டி அம்மாவே
நேசம் மனதில் நிறைந்து ததும்ப
வாசம் வீசிய வாசல் முல்லையே
வாடி வீழ்ந்தீர் நாடி நடுங்க
கூடி அழுகிறோம் கோவில் சிலையே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

