1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம்
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி
வயது 728 ஜனவரி, 1947 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்துணை கொடியதுயர் விரைந்திங்கு வந்திடினும்
எம் அப்பா நீ அருகிலிருக்க எங்களுக்கேது பயம்
என்றன்றோ இறுமாந்திருந்தோம்- இப்புவியில்
ஏதுமிலார் போல் எமை ஆக்கி விட்டு
ஏங்க வைத்துச் சென்றதன் மர்மம் ஏனோ?
காலச் சக்கரம் சுழன்று மாறினும்
கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்ட
கோடி மனிதரில் மாணிக்கம் நீ
ஆண்டொன்று சென்று ஓடி மறைந்தாலும்- நீ
அருகிலிருப்பதைப் போலவே எம் பிரமை
அன்பென்ற ஒன்றையே போதித்த அப்பாவே
என்றேன்றும் நாம் செல்வோம் உன்வழி நேர்மையாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் தீவுகளில் ஒன்றும் கடலுணவு நிறைந்த இடமும் கால்நடை வளர்க்கப்படும் இடமுமான மண்டைதீவில் 08-01-1947 இல் சிதம்பரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளுக்கு அருமைப் புதல்வனாய் விஜயரட்னம் அவர்கள் அருந்தவச்செல்வி, முருகரத்தினம்,வரதலிங்கம் ஆகிய சகோதரர்களுடன் இப் பூமியில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து உயர் நிலை அடைந்து அழகிய வாலிபனானதும் இராசையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அழகு மகள் லீலாதேவி அவர்களை திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து சேந்தன், தனுசன், தனுசிகா, தர்சிகா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் இலங்கை போக்குவரத்து சபை சாரதியாக பல இடங்களுக்கு சேவை ஆற்றி ஓய்வுநிலை பெற்றதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கியதுடன், பழைய திரைப்படங்களை பார்த்து இரசிப்பதில் பிரியம் கொண்டவராக விளங்கினார்.
இவ்வாறு மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-04-2019 இல் 72 வயதில் மானிப்பாயில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"அன்பே எம்
ஆருயிர் உறவே
அணையா தீபம்
அணைந்தது ஏன்
அன்பு உறவுகளை
தவிக்க விட்டு
பறந்து போனது எம்
பாச உறவு "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

