மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகௌரி மோகனகுமார்
வயது 4128 ஜூலை, 1977 – 20 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நெளுக்குளம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகௌரி மோகனகுமார் அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகனகுமார் அவர்களின் அன்புத் துணைவியும்,
பிரவீன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவகணேஷ், சிவலதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலகுமார்(பிரான்ஸ்), சாந்தகுமார்(லண்டன்), Dr. உதயகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ஸ்ரீ ஜெயகுமாரி, விஜயகுமாரி, மற்றும் சேரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருநாவுக்கரசன்(பிரான்ஸ்), மங்கையற்கரசி(பிரான்ஸ்), சிவஅன்பரசன்(பிரான்ஸ்), வடிவேற்கரசன்(பிரான்ஸ்), சிவனேசரசன்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஹேமலதா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர்(லண்டன்), தர்சினி(அவுஸ்திரேலியா), வைகுந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், குளங்கள் அதிகமாக உள்ள இடமும், நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வவுனியா நெளுக்குளத்தில் 28-07-1977 இல் சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக சிவகௌரி அழகிய குழந்தையாக அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் சிவகணேஷ், சிவலதா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குமரேசு பரமேஸ்வரி தம்பதிகளின் அழகு மகனான மோகனகுமார் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிரவீன் எனும் அன்பு நிறைந்த பிள்ளையைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார். இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார். இவ்வாறு கணவன் பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 20-04-2019 இல் 41 வயதில் பிரான்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"இளமை வயதில்
.....இடை நடுவில்
இளம் மலர்
......வாடி வீழ்ந்தது
நாடிய நாம்
....நாதியற்று நிற்க
எங்கே சென்றாய்
....எண்ணி அழுகிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

