மரண அறிவித்தல்

சிவகுரு சுந்தரராஜா
வயது 69
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சுந்தரராஜா அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(கனடா), காண்டீபன்(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), டயானா(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை, ஆனந்தராஜா, கந்தராஜா மற்றும் மீனாம்பிகை, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாபன், சண்முகநாதன், வைரவநாதன், திலகவதி மற்றும் சிவனாதன், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வம்(கனடா), சந்திரா(பிரான்ஸ்), ராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, மார்க்கண்டு, ஐயாத்துப்பிள்ளை, பாலாஜி மற்றும் சரஸ்வதி, சந்திரா, சற்குணம், தவமணி, சுகிர்தராணி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஹாணா, கபில், லக்ஸ்மி, லாவண்யா, குவன்சினி, குவின்சினி, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று Hopital Avicenne எனும் முகவரியில் மு.ப 9:15 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் தீவுக்கூட்டத்தில் ஒன்றும் கடலுணவு பொருட்கள், கால்நடை வளர்ப்பு என சிறப்பு வாய்ந்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் 22-08-1949 இல் சிவகுரு செல்லம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சுந்தரராஜா அவர்கள் நடேசப்பிள்ளை, ஆனந்தராஜா, கந்தராஜா, மீனாம்பிகை, கமலாம்பிகை ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகிய தீவில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் செல்லப்பா இரத்தினம் தம்பதிகளின் அழகு மகள் குணவதி அவர்களை திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வாசுகி, காண்டீபன், பிரதீபன், டயானா, செந்தூரன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கினார். பாசமாக உறவினர்களுடன் பேசி மகிழ்வதுடன் அவர்கள் நலன்களில் கவனம் செலுத்தும் மனம் கொண்ட ஒருவராக இருந்தார்.மற்றும் பழைய திரைப்படங்களை பார்த்து மகிழ்வதில் அலாதி பிரியம் கொண்டவராக திகழ்ந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07-04-2019 இல் 69 வயதில் பிரான்ஸில் உள்ள Paris நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"பௌர்ணமி நிலவே
பாவை முகமே
பாச உறவே
நேச மலையே
பாவம் செய்திடா.
இழகிய மனமே
பாவம் செய்து
பிரித்தான் இறைவன் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

