ஆறுதல்

நன்றி நவிலல்

சிவகுருநாதன் நாகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுருநாதன் நாகலிங்கம்

முன்னாள் இ. போ. ச. தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி

வயது 7715 ஜூன், 1941 – 19 மே, 2019

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
கனகபுரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

எங்கள் குடும்ப தலைவரின் மரணச்செய்தியை கேட்டு ஓடோடி வந்து உதவி ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், உறவுகளின் வீடுகளுக்கு எடுத்துச் சென்ற இணையத்தளங்களுக்கும், துயரத்தை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த திருநெல்வேலியில்15/JUN/1941 ஆம் ஆண்டு நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சிவகுருநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நீலாயதாட்சி, சண்முகலிங்கம், தியாகராஜா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் ஐயம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மகள் புஸ்பராணி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து பாலமுரளி, பாலதர்சினி, பாலச்சந்திரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் சறோஜினி, தவராசா, பவானி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது மாமாவிற்குரிய கடமையை சிறப்பாக செய்து சரண், சாருகன், கிரிசன், பவிசன், சிவராஜி, விஸ்ணு ஆகிய அற்புத பிள்ளைகளின் பேரனாக கடமை செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இலங்கைப் போக்குவரத்து சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கிளிநொச்சியில் கடமையாற்றி ஓய்வு நிலை அடைந்த இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.05.2019 இல் 77 வயதில் கிளிநொச்சியில் உள்ள கனகபுரத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"திருநெல்வேலி மண்ணின்
......திறமை நிறைந்தவனே
தித்திப்பான பேச்சால்
.......கவர்ந்த உள்ளமே
அறிவில் சிறந்த
........ அன்பு நிறைந்தவனே
அகிலம் விட்டு
......போனது ஏன்"

பிற அறிவித்தல்கள்

  1. 20 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.